கதை கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியரிடம் கத்தினார். 'நான்தான் இங்கு முதலாளி. நீ ஒன்றுமே இல்லை. வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல், நீ யார்?’
ஊழியர் அமைதியாகப் பதில் அளித்தார்... 'பூஜ்யம்!’
'அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
'பூஜ்யத்தின் முதலாளி’!
நீதி உங்களுக்குக் கீழ் இருப் பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப் பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!
கதை தனது 99-வது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு முதியவரைப் பேட்டி கண்டார் அந்த நிருபர். பேட்டி முடிந்து விடை பெறுகையில், 'நல்லது ஐயா... உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த வருடம் நீங்கள் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போதும், நான் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்!'' என்றார் நிருபர்.
சின்னப் புன்னகையுடன் பதில் அளித்தார் அந்தப் பெரியவர்... ''இளைஞனே... நீ என்னைவிட ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாய். அடுத்த வருடம் நிச்சயம் நீஎன்னைச் சந்திப்பாய் என்று நான் நம்புகிறேன்!''
நீதி எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்!
இறுதியில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி...
கேள்வி ஒரு மரத்தின் கிளையில் மூன்று தவளைகள் அமர்ந்திருக்கின்றன. அதில் ஒன்று கீழே சலசலத்து ஓடும் ஆற்றில் குதிக்க முடிவெடுக்கிறது. இப்போது மரக் கிளையில் எத்தனை தவளைகள் இருக்கும்?
பதில் மூன்று!
எப்படி? அந்த தவளை குதிக்கலாம் என்றுதான் முடிவு எடுத்தது. ஆனால், குதிக்கவில்லை!
இதில் நீதி என்பதையெல்லாம் விடுத்து, இப்படி யோசித்துப்பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த தவளை கணக்காக முடிவெடுத்து ஆனால், செயல்படுத்தாமல் இருக்கிறோம்?
நாம் தயங்கினாலும் தவிர்த்தாலும், தினசரி வாழ்வில் நாம் எத்தனையோ முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது, சில சுலபமா னவை... பல கடினமானவை!
ஆனால், முடிவெடுக்கவே தயங்கிப் பயந்து ஒதுங்கும் பழக்கம் நம்மில் பலரிடையே இருக்கிறது. தவறான முடிவெடுப்பதால் சில பிழைகள் ஏற்படும்தான். ஆனால், முடிவே எடுக்காமல் இருப்பதால், அதைக் காட்டிலும் அபாயகரமான தவறுகள் நிகழும். நாம் நமது முடிவுகளின் விளைவுகளுடன் வாழப் பழக வேண்டும்!
![](http://new.vikatan.com/av/2011/03/09/images/p91.jpg)

![](http://new.vikatan.com/av/2011/03/09/images/p91a.jpg)
எப்படி? அந்த தவளை குதிக்கலாம் என்றுதான் முடிவு எடுத்தது. ஆனால், குதிக்கவில்லை!
இதில் நீதி என்பதையெல்லாம் விடுத்து, இப்படி யோசித்துப்பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த தவளை கணக்காக முடிவெடுத்து ஆனால், செயல்படுத்தாமல் இருக்கிறோம்?
நாம் தயங்கினாலும் தவிர்த்தாலும், தினசரி வாழ்வில் நாம் எத்தனையோ முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது, சில சுலபமா னவை... பல கடினமானவை!
ஆனால், முடிவெடுக்கவே தயங்கிப் பயந்து ஒதுங்கும் பழக்கம் நம்மில் பலரிடையே இருக்கிறது. தவறான முடிவெடுப்பதால் சில பிழைகள் ஏற்படும்தான். ஆனால், முடிவே எடுக்காமல் இருப்பதால், அதைக் காட்டிலும் அபாயகரமான தவறுகள் நிகழும். நாம் நமது முடிவுகளின் விளைவுகளுடன் வாழப் பழக வேண்டும்!
No comments:
Post a Comment